• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

நாகாடைட்டன்: தாய்லாந்தில் வாழ்ந்த புதிய வகை மாபெரும் டைனோசர் கண்டுபிடிப்பு

Byadmin

May 19, 2026


டைனோசர், டைடன், புதைபடிமங்கள், நாகாடைட்டன், தாய்லாந்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நாகாடைட்டன் (Nagatitan) என்ற இந்த புதிய டைனோசர் இனம் 10 முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது.

    • எழுதியவர், விகி வாங்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தாய்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, நீண்ட கழுத்து கொண்ட புதிய வகை மாபெரும் டைனோசர் வாழ்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப்பெரிய டைனோசரான இந்த ‘நாகாடைட்டன்’, 27 டன் எடையும் (அதாவது ஒன்பது முதிர்ந்த ஆசிய யானைகளின் எடைக்குச் சமம்) 27 மீட்டர் (சுமார் 88 அடி) நீளமும் கொண்டது. இது ‘டிப்ளோடோகஸ்’ டைனோசரை விட நீளமானது.

அந்த டைனோசரைப் போலவே, இதுவும் நீண்ட கழுத்தைக் கொண்ட தாவர உண்ணிகளான ‘சாரோபாட்’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

பிரிட்டன் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு தசாப்தத்திற்கு முன்பு வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து இந்த புதிய இனத்தை அடையாளம் கண்டுள்ளது.

பண்டைய காலநிலை சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், இத்தகைய மாபெரும் டைனோசர்கள் உருவாக எவ்வாறு வழிவகுத்தன என்பது குறித்து இந்த கண்டுபிடிப்பு விளக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

By admin