• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே பிளேஆஃப் முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன? ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி

Byadmin

May 19, 2026


இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது (கோப்புப் படம்)

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்த வெற்றி தேவை என்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று (மே 18) சேப்பாக்கத்தில் தோற்றிருக்கிறது சிஎஸ்கே.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுக்க, அதை 19 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது. அவர்களோடு குஜராத் டைட்டன்ஸ் அணியையும் (16 புள்ளிகள்) அவர்கள் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதேசமயம் 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகளில் தேங்கி நிற்கிறது. ஞாயிற்றுக் கிழமை ஆர்சிபி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த நிலையில், இன்னும் ஒரேயொரு இடம் தான் மீதமிருக்கிறது. அந்த இடத்தை சிஎஸ்கே அடைவதற்கான வாய்ப்பு இந்தத் தோல்வியின் மூலம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவையும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமான இந்தப் போட்டியில் சில தருணங்களில் நல்ல நிலையில் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது ஏன்? தற்போது அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளில் என்ன நடக்கவேண்டும்?

By admin