• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்புக்கு அடுத்து சில நாட்களில் புதின் சீனா செல்வது ஏன்? உலக அதிகார மையமாக மாறுகிறதா சீனா?

Byadmin

May 19, 2026


சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த அரசுமுறைப் பயணம் மேற்கோள்ளப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். புதினின் சீனப் பயணத்தை உறுதிப்படுத்தி கிரெம்ளினும் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

பட மூலாதாரம், SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – சீன அதிபர் ஷி ஜின்பிங்

    • எழுதியவர், பிபிசி சீனா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். புதினின் சீனப் பயணத்தை உறுதிப்படுத்தி ரஷ்ய அதிபர் மாளிகையும் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, மே 13 முதல் 15 வரை டிரம்ப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார், அப்பயணம் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த பயணத்தில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் டிரம்புடன் சென்றிருந்த போதிலும், பயணம் முடிந்த பிறகும் எந்தவொரு ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.

அதன் பின்னர், சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றடைவார்.

By admin