இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சாரம், ஆன்மீகம், அரசு நிர்வாகம் மற்றும் பெருநிறுவன துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சஜன் ராஜ் குருப் கூறுகையில், “கிருஷ்ணாவதாரத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தருணத்தை மட்டுமல்ல, அதனுடன் இணைந்த உணர்வையும் பதிவு செய்வதே எங்களின் நோக்கம்.
இந்த முயற்சி, அந்தக் காட்சிகளை திரையைத் தாண்டி நிரந்தரமான கலாச்சார வடிவமாக மாற்ற உதவுகிறது. ராஜா ரவி வர்மா தனது கல் அச்சுப் படங்கள் மூலம் தெய்வீகத்தை மக்களின் இல்லங்களுக்குள் கொண்டு வந்தது போல, நாங்களும் அந்த மரபை புதிய தலைமுறைக்கு புதுமையாக அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.