• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றை சன்ரைசர்ஸ் உறுதி செய்தது எப்படி?

Byadmin

May 19, 2026


47 பந்துகளில் 70 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் இஷான் கிஷன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 47 பந்துகளில் 70 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார் இஷான் கிஷன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 63வது போட்டியில் இன்று (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இந்த சீசன் சேப்பாகத்தில் நடைபெறும் கடைசி ஐபிஎல் போட்டி இது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் பிளேயிங் லெவனில் 1 மாற்றம் செய்யப்பட்டது. குர்ஜப்னீத் சிங் நீக்கப்பட்டு, அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் போட்டியில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இன்றும் களமிறங்கவில்லை. “தோனி இங்கு மைதானத்தில் இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் போட்டியில் விளையாடும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை.” என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸின்போது தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

By admin