• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

நிதின் கட்கரிக்கு எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்துடன் தொடர்பா? என்ன சர்ச்சை?

Byadmin

Jul 30, 2026


மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் பயன்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் பயன்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெட்டா, எக்ஸ், கூகுள் மற்றும் பெயர் தெரியாத சிலருக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்த அவதூறு வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மேற்கொள்ளப் போவதாக மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களில் மத்திய அரசின் எத்தனால் கலப்புத் திட்டத்துடன் நிதின் கட்கரி தவறான முறையில் தொடர்புப்படுத்தி காட்டப்பட்டிருந்தார்.

நீதிபதி ஆரிஃப் டாக்டர் தலைமையிலான அமர்வு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு மத்திய அமைச்சரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் எஸ். லட்டாவுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி நிதின் கட்கரி 11 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த உள்ளடக்கத்தால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிதின் கட்கரி 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். இ-20 கொள்கையுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறுகிறார். சிலர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், அவற்றில் எத்தனால் கலப்புத் திட்டத்துக்கு (EBP) தானே பொறுப்பு எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

By admin