• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரும் மஹ்தி குடும்பம் – ஏமனில் தற்போது என்ன நிலவரம்?

Byadmin

Jul 26, 2025


நிமிஷா, ஏமன், மரண தண்டனை, இந்தியா, மத்திய கிழக்கு, பழங்குடி
படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.

தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது ‘வஸாபி’ (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

‘நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென’, தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக, ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பதிவை வெளியிட்டார் அப்துல் ஃபத்தா மஹ்தி. நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அதில் அவர் கூறியிருந்தார்.

By admin