• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

நீட் மறுதேர்வு அச்சம்: அடுத்தடுத்து இரு மாணவிகள் உயிரிழப்பு – பெற்றோர், மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Byadmin

Jun 21, 2026


நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இரண்டு மாணவிகள் தற்கொலை

    • எழுதியவர், பெ. சிவசுப்ரமணியம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக கோவை மற்றும் சேலத்தில் அடுத்தடுத்து இரு மாணவிகள் தற்கொலை முடிவை தேடிக் கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“ஜூன் 16 ஆம் தேதி என் மகளுக்குப் பிறந்தநாள். வழக்கம்போல கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், மூன்றே நாளில் இப்படியொரு மோசமான முடிவை நாடுவாள் எனக் கனவிலும் நினைக்கவில்லை” எனக் கூறி கண்கலங்குகிறார் சேகர்.

சேலத்தில் முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் சேகரின் மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமையன்று தற்கொலை முடிவை தேடிக் கொண்டார்.

கோவையில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி அனுகீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். வினாத்தாள் கசிவு, நீட் பயிற்சி மைய கட்டணம் போன்றவற்றால் மரணங்கள் அதிகரிப்பதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. நீட் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?

By admin