• Tue. Jul 15th, 2025

24×7 Live News

Apdin News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் ஆக.4-ல் நேரில் ஆஜராக உத்தரவு | 6 people including 5 IAS officers ordered to appear in person on Aug 4 in contempt of court case

Byadmin

Jul 15, 2025


சென்னை: நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 5 ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு பணி​களுக்​காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணி​யில் அமர்த்​தி​யது.

பின்​னர் அவர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதை எதிர்த்து பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நிர்​வாக தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். அவர்​களுக்கு மாற்​றுப்​பணி வழங்க அரசுக்கு தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதிமன்​ற​மும் உறுதி செய்​தது.

அதன்​படி, பி.சர்​மிளா பேகம் உள்​ளிட்ட 16 பேருக்கு வணி​கவரித் துறை மற்​றும் பள்​ளிக்​கல்​வித் துறை​யில் இளநிலை உதவி​யாள​ராக பணி வழங்​கப்​பட்​டது. அவர்​களது பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணிவரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. இதனால், இவர்​கள் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்​கப்​ப​டா​மல் பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டனர். இதை எதிர்த்து சர்​மிளா பேகம் உள்​ளிட்ட 16 பேரும் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிபதி ஆர்​.என்​.மஞ்​சுளா, உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மனு​தா​ரர்​களை 1996-ம் ஆண்டு முதல் பணி வரையறை செய்து அவர்​களை பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என கடந்த 2024-ம் ஆண்டு பிப்​.15 அன்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்லை எனக் கூறி ஐஏஎஸ் அதி​காரி​களான பணி​யாளர் மற்​றும் நிர்​வாகத் துறை முzதன்மை செயலர் சி.சமயமூர்த்​தி, நிதித்​துறைச் செயலர் டி.உதயச்​சந்​திரன், வரு​வாய் நிர்​வாகத்​துறை முதன்மை ஆணை​யர் ராஜேஷ் லக்​கானி, வணி​கவரித் துறை ஆணை​யர் டி.ஜெகந்​நாதன், கரு​வூலம் மற்​றும் கணக்​குத்​துறை ஆணை​யர் கிருஷ்ணன் உன்னி மற்​றும் பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குந​ரான எஸ்​.கண்​ணப்​பன் ஆகிய 6 பேருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர் ஜி.​பாலா டெய்சி ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி, ஐஏஎஸ் அதி​காரி​கள் 5 பேர் மற்​றும் பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் என 6 பேரும் ஆக.4-ம் தேதி நேரில்​ ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.



By admin