• Fri. Jul 4th, 2025

24×7 Live News

Apdin News

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Jul 4, 2025


நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது.

பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.

தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம். முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.

மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.

By admin