• Tue. Jul 1st, 2025

24×7 Live News

Apdin News

நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தமிழரசிடம் (படங்கள் இணைப்பு)

Byadmin

Jul 1, 2025


யாழ். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாகத் தெரிவானார்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று நெடுந்தீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாகத் தெரிவானார்.

உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவானார்.

13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தது.

By admin