• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

நெய்மர் ஓய்வு: பிரேசில் நார்வேயிடம் தோற்று வெளியேற என்ன காரணம்? ஓர் அலசல்

Byadmin

Jul 6, 2026


பிரேசில் - நார்வே, நெய்மர், ஹாலண்ட், உலகக்கோப்பை கால்பந்து 2026

பட மூலாதாரம், Rob Newell – CameraSport via Getty Images

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் குரோஷியாவிடம் தோற்று பிரேசில் துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பும், அதே கட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்ற போதும் அவர்கள் சற்றே துரதிர்ஷ்டவசமாக இருந்தனர். இந்த முறை அவர்களால் அந்த நிலையைக்கூட எட்ட முடியவில்லை. நார்வேயிடம் பிரேசில் அடைந்த தோல்வியில் துரதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை.

உண்மையைச் சொல்வதானால், இது ஒரு முழுமையான தோல்வி.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினாவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்த பிறகு, கார்லோ அன்செலோட்டி பிரேசில் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

பிரேசில் அணியின் பொறுப்பில் அவர் இருந்த 16 ஆட்டங்களில், 10-ல் வெற்றி, மூன்றில் டிரா மற்றும் மூன்றில் தோல்வி கண்டுள்ளார். தான் வருவதற்கு முன்பு, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோற்றுத் தடுமாறிய ஓர் அணியை அவர் மாற்றியமைத்தார்.

ஆனால் அது போதுமானதாக அமையவில்லை.

By admin