புகார்
கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி கூடுதலாக 10 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. தேர்தலின்போதே இரு கட்சிகளுக்கும் இடையே சில மனக்குமுறல்களும் ஏற்பட்டது.
என்ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி, பாஜக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யவில்லை. அதேநேரத்தில் பாஜக தரப்பில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க சுயேச்சைகளுக்கு ஆதரவு அளிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதனால் தேர்தல் முடிந்து கூட்டணி ஆட்சி அமைந்து, முதல்-அமைச்சர், அமைச்சர் பொறுப்பேற்றாலும், இன்று வரை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த துறைகளையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியே நிர்வகித்து வருகிறார்.
சபாநாயகர் பதவியை பெற பாஜக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி அளித்தது. கடந்த முறையை விட பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்ததால், துணை சபாநாயகர் பதவியை பெற்றுக்கொள்ளும்படி ரங்கசாமி அறிவுறுத்தினார்.
இதை பாஜக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இதுவரை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகி 2 மாதமாகியும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக மோதல் முற்றுப் பெறவில்லை. இருதரப்பிலும் பிடிவாதம் தொடர்கிறது.