• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் வெள்ளமே வராத ‘கருப்பு கிராமத்தில்’ மக்களை வாட்டும் இரட்டை கவலை என்ன?

Byadmin

Sep 7, 2026


காட்லாங் கிராமத்தில் உள்ள முட்டைக்கோஸ் வயல்கள்

பட மூலாதாரம், Nima Norbu Tamang

படக்குறிப்பு, காட்லாங் கிராமத்தில் உள்ள முட்டைக்கோஸ் வயல்கள்

    • எழுதியவர், கனி அன்சாரி
    • பதவி, பிபிசி நியூஸ் நேபாளம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு, போட்டிகோஷி-திரிசூலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் வெவ்வேறு வகையான துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது.

ஒருபுறம், அந்த பயங்கரமான வெள்ளத்தில் தங்கள் விளைநிலங்களையும் உறவினர்களையும் இழந்து நிற்கும் மக்களின் வலி உள்ளது. மறுபுறம், வெள்ளத்தில் தங்கள் சொந்தங்களை இழக்கவில்லை என்றாலும், நிலங்கள் தப்பியுள்ள நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் மக்களின் கவலை உள்ளது.

ரசுவா மாவட்டத்தில் உள்ள கட்லாங் (Gatlang) கிராமத்தை உள்ளூர் மக்கள் ‘கருப்பு கிராமம்’ என்று அழைக்கின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த குறைந்தது 29 பேர் காணாமல் போய்விட்டதாக உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமத்திற்குள் வெள்ளநீர் நுழையவில்லை என்றாலும் கூட, அங்கே வசிக்கும் பலரும் இதன் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிராமத்திற்கு அருகே உள்ள சந்தைப் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள்தான் இவர்கள்.

By admin