நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த 97 வயது மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் அடையாளமாக இந்தக் காட்சிகள் மாறியுள்ளன.
தலை முதல் கால் வரை சேறு நிரம்பி இருந்த இந்த 97 வயது மூதாட்டி, எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். பெரும் அழிவை ஏற்படுத்திய பேரிடர் சூழலில், இது நம்பிக்கையூட்டும் தருணமாக அமைந்தது. இந்த மூதாட்டி பெயர் குண மாயா போஹாரா.
காத்மாண்டுவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவிக்காட் பகுதியில் ஒரு முதியோர் இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக இவர் வசித்து வந்தார். திடீரென வந்த வெள்ளம் அப்பகுதி வழியாக பாய்ந்து, கட்டடங்களை அழித்து, மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்தது. அவர்களில் இந்த மூதாட்டியும் ஒருவர்.
இந்தப் பேரிடர் குறித்த செய்தி கிடைத்ததும் இவரது கொள்ளுப் பேரனான தீபக் போஹாரா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு