• Mon. Aug 31st, 2026

24×7 Live News

Apdin News

மதுரை, திண்டுக்கல்லை உலுக்கும் எஃப்.கியூ.எல். கிரிப்டோகரன்சி மோசடி புகார் – என்ன நடந்தது? முழு விவரம்

Byadmin

Aug 31, 2026


பண இரட்டிப்பு மோசடி, எஃப்.கியூ.எல் செயலி மோசடி

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி மொபைல் செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பணத்தை இழந்ததாக அந்த மாவட்டங்களில் காவல்துறையினரிடம் புகார்கள் குவிந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

என்ன நடந்தது?

“இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஆன்லைன் செயலியில் பணம் செலுத்தி ஏமாற்றி விட்டோம். மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ காவல்துறை வழிவகை செய்ய வேண்டும்” என கூறுகிறார், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா.

45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ்ச், விஜி இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரு ஆன்லைன் செயலிகளில் முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் ரூ.54 ஆயிரம் முதலீடு செய்தால் 45 நாட்களில் இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டதாக தெரிவித்த அவர்கள், கடந்த சில நாட்களாக செயலியில் இருந்து பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக கூறுகின்றனர்.

By admin