• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளம்: 10 கிமீ சுரங்கத்தில் 40 இந்தியர் உள்பட 400 பேர் சிக்கினர் – மீட்பதில் என்ன சவால்?

Byadmin

Aug 30, 2026


நேபாளத்தில் சேறு நிறைந்த சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், Prime Minister’s Secretariat

படக்குறிப்பு, நேபாளத்தில் சேறு நிறைந்த சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • எழுதியவர், அசோக் தஹால்
    • பதவி, பிபிசி நேபாளி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRA) வெளியிட்ட தகவலின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன எல்லைக்கு அருகே உள்ள ராசுவாகதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றும் சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நீர்மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தொடர்பு துண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் விவரங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

By admin