• Sun. Aug 30th, 2026

24×7 Live News

Apdin News

மன்ஜித் கவுர்: பஞ்சாபில் இந்த பெண் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருக்கு என்ன நடந்தது?

Byadmin

Aug 30, 2026


மன்ஜித் கவுர், இன்ஃப்ளூயன்சர்

பட மூலாதாரம், manjeet__sukh_1313/Insta

படக்குறிப்பு, மன்ஜித் கவுர்

    • எழுதியவர், நவ்ஜோத் கௌர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடம் தரக்கூடும்.)

பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் கரா பகுதியில் வசித்து வந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மன்ஜித் கவுர், சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உயிரிழந்தார்.

குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சண்டிகரில் இருந்து மன்ஜித் கடத்தப்பட்டு, உயிருடன் எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சண்டிகர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில், சண்டிகர் காவல்துறை இரண்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, மன்ஜித் கவுர் கடுமையான தீக்காயங்களுடன் சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்பு அவர் மொஹாலியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

By admin