• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

நேரத்தையே ஆயுதமாக்கும் புதிய போர் – தொலைதூர தீவில் தயாராகும் ஜிபிஎஸ் ஹேக்கர்கள்

Byadmin

Sep 27, 2026


நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘ஜாம்மர்டெஸ்ட்’, ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா.

    • எழுதியவர், கேத்தரின் டன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மின்சார கட்டமைப்பு, தரவு வலையமைப்பு, பங்குச் சந்தைகள் போன்ற நவீன அமைப்புகள் சரியாக செயல்படுவதற்கு மிகவும் துல்லியமான நேர மற்றும் இடம் தொடர்பான தகவல்களைச் சார்ந்துள்ளன. நேரத்தையும் இடத்தையும் ஒத்திசைக்கும் அமைப்புகளைத் தாக்குவதன் மூலம் நவீன உலகை முடக்குவது எவ்வளவு எளிது?

இதை ஆராயும் ஜாம்மிங் நிபுணர்களைச் சந்திப்போம்.

மிக உயரமான தோற்றம் கொண்ட ஹரால்ட் ஹாக்லின், நரைத்த தாடி, கம்பி வடிவிலான கண்ணாடி, குறும்புத்தனமான புன்னகை ஆகியவற்றுடன் காணப்படும் நபர்.

2024 செப்டம்பரில் அவரைச் சந்தித்தபோது, அவர் அணிந்திருந்த ஒளி பிரதிபலிக்கும் பாதுகாப்பு மேலங்கியின் பாக்கெட்டில், கடிகாரத்துடன் ஓடும் வெள்ளை முயலைக் காட்டும் ஒரு சின்னம் இருந்தது.

ஹாக்லின், நார்வே மெட்ராலஜி சேவையின் நேரம் மற்றும் அதிர்வெண் அளவியல் பிரிவின் தலைமைப் பொறியாளராக உள்ளார். 2024-ஆம் ஆண்டு ஜாம்மர் டெஸ்ட்டில் பங்கேற்றவர்கள் சூட்டிய “நார்தர்ன் லைட்ஸ் நெர்ட்ஸ்” என்ற பெயராலும் அவர் அழைக்கப்படுகிறார்.

By admin