• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

26 வயது ஆண் உடலில் கருப்பை: குழந்தையின்மையால் மருத்துவரை சந்தித்த போது தெரியவந்த அதிர்ச்சி

Byadmin

Sep 27, 2026


டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பிரச்னைக்காக மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்தபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

படக்குறிப்பு, டெல்லியைச் சேர்ந்த 26 வயது ஆணின் உடலுக்குள் கருப்பையும், கருக்குழாய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்).

டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தையின்மை தொடர்பாக மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்தபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

எனினும், வெளிப்புறமாக அவரது உடல் இயல்பான ஆண் உடலைப் போலவே இருந்ததாகவும், ஆண்களுக்கான உடல் அம்சங்களும் அவரிடம் இருந்ததாகவும் சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, இந்த நிலை இருப்பதை வெளிப்படையாகக் காட்டக்கூடிய அறிகுறிகள் எதுவும் அவரிடம் இல்லை.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு சிகிச்சையளித்த தலைமை சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் சுஷில் கர்பண்டாவின் கூற்றுப்படி, குழந்தையின்மை தொடர்பான பரிசோதனையின்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இது பெர்சிஸ்டன்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (பிஎம்டிஎஸ்) எனப்படும் மிகவும் அரிதான பிறவியிலேயே ஏற்படும் நிலையாகும். இதுவரை உலகளவில் 300-க்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

நேச்சர் ரிவ்யூ யூராலஜி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிஎம்டிஎஸ் நிலை காரணமாக ஒருவருக்கு 46XY குரோமோசோம்கள் இருக்கும். அவரது உடல் ஆணாக இயல்பாக வளர்ச்சியடையும்.

By admin