பங்களாதேஷ் ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆதரவாளர்கள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கிடையே வன்முறை வெடித்துள்ளது. இதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்த வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹசினா ஆதரவாளர்கள் கம்புகளைக் கொண்டு பொலிஸ் அதிகாரிகளையும் சுமார் 20 வாகனங்களைக் கொண்ட வாகன அணியையும் தாக்கியுள்ளனர்.
மாணவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் கட்சியின் தலைவர்கள் அந்த வாகனங்களில் பயணம் செய்துள்ளனர்.
ஹசினாவின் பூர்வீக இல்லத்தையும் அவரது அவாமி லீக் கட்சி இன்னும் வலுவாக உள்ள வட்டாரத்தையும் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
கடந்த ஆண்டு நடந்த கிளர்ச்சியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
இத்போதே வன்முறை வெடித்துள்ளது.
புதிய கட்சியின் உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்கப்பட்டதாக நாட்டின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நொபெல் அமைதிப் பரிசு வெற்றியாளர் முகமது யூனுஸ் கூறினார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த அவர் உறுதியளித்துள்ளார்.
மாணவர்கள் வழிநடத்திய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஷேக் ஹசினா கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
The post பங்களாதேஷில் ஊர்வலத்தில் வன்முறை; நால்வர் கொல்லப்பட்டனர்! appeared first on Vanakkam London.