• Thu. Jul 24th, 2025

24×7 Live News

Apdin News

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு நீதி கோரி மாணவர்கள் போராட்டம்

Byadmin

Jul 23, 2025


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் விமானப்படை விமானம் பாடசாலை மீது விழுந்த சம்பவத்தையொட்டி, இன்று (23) போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் இறங்கியவர்கள் இழப்பீட்டுத் தொகை கோருகின்றனர்.

அரசாங்கம் மேலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்றும் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் ஆகியோரின் எண்ணிக்கையைச் சரியாக கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி : பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் தொகை 27ஆக அதிகரிப்பு

மாணவர்கள் முன்வைத்த 6 கோரிக்கைகளும் நியாயமானது என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

பாடசாலையைச் சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் உயிரிழந்தனர். 160க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த விமானி தவ்கிர் இஸ்லாம் சாகரின் இறுதிச் சடங்கும் இன்று நடைபெற்றது.

By admin