0
தேவையான பொருள்கள்
பசலைக்கீரை- 2 கட்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மஞ்சள் தூள், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது- தலா 1 தேக்கரண்டி
தனியா தூள், மிளகாய் தூள்- தலா 1 தேக்கரண்டி
வெங்காயம்- 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி- கால் கிண்ணம்
பீன்ஸ்- 6 (நறுக்கியது)
கேரட்- 2 (நறுக்கியது)
செய்முறை
பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, மசித்த கீரை, பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு கிரேவி போல் வந்ததும் இறக்கவும். சத்தான பசலைக்கீரை மசாலா தயார்.