• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியீடு!

Byadmin

Nov 2, 2026


பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்களை , உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கடந்த 2026 ஒக்டோபர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் , நேர்முகப் பரீட்சைக்குத் தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் திகதி, நேரம், இடம் மற்றும் நேர்முகப் பரீட்சைச் சபை இலக்கம் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், ஒவ்வொரு மாகாணத்திற்கும் மொழி மூலத்திற்கும்  உரியவாறு (முழுநேர அங்கவீனமுற்ற விண்ணப்பதாரர்கள் உட்பட)  2026.10.30 ஆம் திகதி முதல் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய G3 மற்றும் G4 அறிவுறுத்தல் பத்திரங்களும், நேர்முகப் பரீட்சையின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களுக்கான F2, F3, F4 மற்றும் F5 மாதிரிப் படிவங்களும் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

எனவே, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் குறித்த அறிவுறுத்தல்களை கவனமாகப் பரிசீலித்து, தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

By admin