• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

பணிச் சூழலால் அடிக்கடி ஏற்படும் கழுத்து வலியை தவிர்க்க உதவும் ஐந்து எளிய உடற்பயிற்சிகள்

Byadmin

Oct 7, 2026


கழுத்து, கூன், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை

படக்குறிப்பு, கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளின் தொடர்ச்சியான பயன்பாடு உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை, நம் கழுத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கிறது.

    • எழுதியவர், டேவிட் காக்ஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மனித தலையின் எடையைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்ப்பது நல்லது.

நீங்கள் நேராக நிமிர்ந்து அமர்ந்திருக்கும்போதோ, நின்ற நிலையில் இருக்கும்போதோ கழுத்தின் மீது உங்கள் தலை கொடுக்கும் எடையின் அளவு சுமார் 5.4 கிலோ என்று லண்டனில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்டனி கோஷ் கூறுகிறார். இதுவொன்றும் பெரிய பிரச்னை இல்லை.

ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், பெரும்பாலும் குனிந்த நிலையிலேயே செயல்படுகின்றனர். அதாவது, மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்களைப் பார்க்கும்போது, கழுத்தின் மீது நாமே அதிக எடையை அழுந்தச் செய்கிறோம்.

வழக்கத்திற்கு மாறாக கீழ்நோக்கிப் பார்க்கும் நிலையில், கழுத்தின் மீதான தலையின் எடை சுமார் 27.2 கிலோ வரை உயர்வதாகக் கூறுகிறார் கோஷ். “எனவே, உங்கள் கழுத்து மிகக் கடுமையான அழுத்தத்தை தாங்க முயல்கிறது.”

சுருக்கமாகக் கூறினால், நவீன வாழ்க்கை முறை நம் கழுத்துகளுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஆனால், நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்கள் கழுத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளைத் தடுக்கவும் நீங்கள் ஐந்து எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.

By admin