• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

பணியிட மாறுதலில் முறைகேடு; அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

Byadmin

Jul 27, 2025


தமிழ்நாடு, பள்ளிகள், ஆசிரியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியிட மாறுதல், முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் (கோப்புப்படம்)

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், கலந்தாய்வுக்கு முன்பே பல இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும், கலந்தாய்விலும் பல பணியிடங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக நடைபெறும். வழக்கமாக மே மாதத்துக்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கலந்தாய்வு துவங்கும்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவில்லை. ஜூன் 19 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை விண்ணப்பிக்கவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து கலந்தாய்வு துவங்கி, வரும் 30 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக 38 ஆயிரம் ஆசிரியர்கள், எமிஸ் வாயிலாக விண்ணப்பித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்களை நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்கள்!

கலந்தாய்வில் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அதில் ஆட்சேபம் இருந்தால் அதுபற்றி முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். பள்ளி திறப்பதற்கு முன்பே இந்த பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுவிடும். வெவ்வேறு தகுதி, நிலையிலுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கிறது.

By admin