• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

பனாமா திட்டம்: உலகின் அனைத்து புத்தகங்களையும் அழித்து ஏஐ-க்கு பயிற்சி

Byadmin

Aug 11, 2026


மார்சல் ஃபோன்ட் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்பவராக (பயன்படுத்தப்பட்ட அல்லது அச்சிடப்படாமல் போன புத்தகங்களை வாங்கி விற்பவர்) பணியாற்றி வருகிறார்.

பட மூலாதாரம், Courtesy of Marçal Font

படக்குறிப்பு, மார்சல் ஃபோன்ட் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்பவராக (பயன்படுத்தப்பட்ட அல்லது அச்சிடப்படாமல் போன புத்தகங்களை வாங்கி விற்பவர்) பணியாற்றி வருகிறார்.

ஏப்ரல் 30-ஆம் தேதி, கத்தலோனியாவின் படலோனா நகரில் பழைய புத்தகங்களின் விற்பனைக்குப் புகழ்பெற்ற லிப்ரேரியா ஃபெனிக்ஸ் புத்தகக் கடைக்கு வந்த ஒரு ஆர்டர், மார்சல் ஃபோன்ட்டின் கவனத்தை ஈர்த்தது.

“நான் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே, கோடிக்கணக்கான வித்தியாசமான ஆர்டர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் எதற்கும் அவ்வளவு எளிதில் பதற்றமடைவதில்லை” என்கிறார் அவர். பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியராகவும் கவிஞராகவும் அவர் உள்ளார்.

அந்த குறிப்பிட்ட ஆர்டர் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து வந்தது. ஆனால், அந்தப் புத்தகக் கடை இதற்கு முன்பும் கத்தலோனியப் புத்தகங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

“ஜப்பான் வரையிலும் நாங்கள் புத்தகங்களை அனுப்புகிறோம். அது ஒன்றும் அசாதாரணமான விஷயமல்ல. ஆனால், இந்த ஆர்டர்களின் முறைதான் வித்தியாசமாக இருந்தது” என்கிறார் ஃபோன்ட்.

மே மாத தொடக்கத்தில் மேலும் புதிய ஆர்டர்கள் வரத் தொடங்கியபோது, இது மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சத்தில் ஃபோன்ட் விசாரிக்க முடிவு செய்தார்.

By admin