• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு- முழு விவரம்!

Byadmin

Aug 11, 2026


கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.

5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.

By admin