4
பனைமர ஓலையிலே
வேலியொன்று நான் அடைச்சேன்
வீட்டுக் காணிக்குள்ளே
ஒரு கோழி கூட வாராது பாதுகாத்தேன்
பனையோலை வேலி
பலகாலம் நிலைத்திருக்கும்
செம்மண் அழகிலே
தூசியெங்கும் படர்ந்திருக்கும்
வடக்கு நிலப்பரப்பெங்கும்
பனையோலை வேலியே
அழகழகாய் பூத்திருக்கும்
அவரவர் விருப்பம் போல்
அணிவகுக்கும்
பனையோலை வேலிக்கென்று
ஒரு கூட்டம் வேலைக்கு இருந்தது
வேலி அழகாகவும் இருந்தது
வேலை நிறைவாகவும் இருந்தது
பனையோலை வேலி இப்போ
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது
தகர வேலி யாகவும்
மதில் வேலியாக மாறிவிட்டது
பழையதை எல்லாவற்றையும் மறந்திட்டு
நினைவுகளை மட்டும் இப்போ.
நெஞ்சில்
சுமந்து கொண்டிருக்கிறோம் .
வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்.