• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

பரந்தூர் விமான நிலைய திட்டம்: மத்திய அரசின் பதிலால் எழுந்த விவாதம்

Byadmin

Jul 30, 2026


பரந்தூர் விமான நிலைய திட்டம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வில்சன், “அப்படியானால், தற்போதைய நிலையில் திட்டம் தொடர்வதாகவே பார்க்க வேண்டியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

ஆனால், புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக தமிழ்நாட்டை ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக பரந்தூர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும், முற்றிலுமாக ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

By admin