• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

பல்ஜிந்தர் சிங்: சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

Byadmin

Sep 27, 2026


பல்ஜிந்தர் சிங், சௌதியில் இந்தியருக்கு மரண தண்டனை - தாயகத்தில் 2 குழந்தைகளுடன் தவிக்கும் மனைவி

    • எழுதியவர், குர்பிரீத் சாவ்லா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“இப்போது எங்கள் மகனைக் காப்பாற்ற மோதி அரசாங்கத்தாலும் மோதியாலும் மட்டுமே முடியும்; மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் அனைத்து நீதிமன்றங்களையும், ஏன் சௌதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தைக்கூட அணுகிப் பார்த்துவிட்டோம்; ஆனாலும் அவருக்கான தண்டனை மாறவில்லை.”

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியின் சுஜான்பூர் வட்டாரத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜிந்தர் சிங்கின் வயதான பெற்றோரின் வார்த்தைகள் இவை.

சௌதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்ஜிந்தர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் உதவி கோரி வருகின்றனர்.

பல்ஜிந்தர் சிங் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

பஞ்சாபில் உள்ள பல்ஜிந்தர் சிங்கின் வீடு உறவினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிறரின் வருகையால் எப்போதும் பரபரப்பாக உள்ளது. வீட்டில் அவரது வயதான பெற்றோர்கள், மனைவி மற்றும் 2 சிறு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினரின் முகங்களில் கவலையும் இயலாமையும் குடிகொண்டுள்ளன.

By admin