12
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் ‘#D56 ‘ திரைப்படத்தில் தனுஷ், பிரீத்தி முகுந்தன், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, விஜய் கே குமார் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் ப்ரிமார்க் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாகவம்சி, ஹரிதா லிங்கசாமி, சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தென்னிந்தியாவின் சுற்றுலாத்தலமான மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் இப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இதனிடையே சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் தனுஷ், வடிவேலு ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.