• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

அதிமுக தவெகவை விழுங்கும்..!- தாராபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Byadmin

Sep 27, 2026


தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, கன்னிவாடி பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து இபிஎஸ் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெற்ற வாக்குகளை விற்றவர் தற்போது தவெகவில் மீண்டும் போட்டியிடுகிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

வேறு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்த தவெக தூய கட்சி அல்ல, தீய கட்சி; ஆட்சியை காப்பாற்றுவதற்காக வெட்கக் கேடான செயலில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

கொல்லைப்புறம் வழியாக வாய்ப்பு கொடுத்து கட்சியை காப்பாற்ற நினைப்பவர்தான் விஜய்.

காஸ்ட்லி முதல்வர் விஜய்க்கு சனி, ஞாயிறு என்றால் விடுமுறை. தலைமைச் செயலகத்தில் என்ன கோப்புகளை முதல்வர் பார்க்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தாதவர்தான் தவெக தலைவர் விஜய். துயரம் நடந்த நேரத்தில் தவெக தலைவர் விஜய் காரில் ஏறி ஓடிவிட்டார்.

72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறுபவர் தேவையா?

அதிமுக படிப்படியாக தவெகவிற்கு வந்துவிடும் என்கிறார்கள். அது கனவில் கூட நடக்காது.

அதிமுகதான் தவெகவை விழுங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

By admin