• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம் ஓராண்டுக்குப் பிறகு எப்படி உள்ளது? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Sep 27, 2026


 கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம், 41 பேர் பலி
படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரம்

கரூரில் இன்றைய முதல்வர் விஜய், கடந்த ஆண்டு இதேநாளில் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்த ஓராண்டு கடந்துள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்றது உட்பட பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரம் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறது.

கரூர் துயர சம்பவத்தின் முதலாம் ஆண்டை முன்னிட்டு வேலுசாமிபுரத்தில் பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளும், அங்குள்ள மக்களின் தற்போதைய உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் என்ன?

ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவமும் அதற்குப் பிந்தைய அரசியலும்!

கரூர் கூட்ட நெரிசல், விஜய் பிரசாரம், 41 பேர் பலி

படக்குறிப்பு, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்)

கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி, கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த நாளில் திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை திரும்பினார் விஜய். அப்போது அது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின், அதே இரவில் கரூருக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தார்.

சென்னை திரும்பிய விஜய், இரு நாட்களுக்குப் பின்பு, ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அன்றைய ஆளும்கட்சியின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்வினையாற்றியது. உயிரிழப்புகள் தொடர்பாக தமிழகக் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் பல தவெக நிர்வாகிகள் எனப் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று தவெக-வினர் குற்றம்சாட்டினர்.

By admin