0
இந்தியா – லடாக் பகுதிக்கு அருகிலுள்ள கார்கில் நகரின் பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த இங்கிலாந்து சுற்றுலாப் பயணி ஒருவரை, இந்திய பொலிஸார் துரிதமாக செயற்பட்டு, அவரை மீட்டெடுத்துள்ளனர்.
கார்கில், பார்காச்சிக் பனியோடைக்கு ஹாரி டொமினிக் வைட்ஹெட் (55 வயது) எனும் இங்கிலாந்து பிரஜை சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் தவறுதலாகப் பள்ளத்தாக்கினுள் விழுந்தார். எனினும், கையடக்கத் தொலைபேசி உடன் இருந்தமையால் அவசர உதவி எண் 112ஐ அழைத்து, அவர் உதவி நாடினார்.
உதவிக்குழு பொலிஸாக்கு உடனடியாகத் தகவல் தந்தது. பொஸிஸாரும் தொண்டூழியர்களும் துரிதமாகச் செயல்பட்டு, கடுமையாக முயற்சி செய்து, காயமுற்ற சுற்றுலாப் பயணி ஹாரியை மீட்டெடுத்தனர்.
தம்மைத் தக்க சமயத்தில் காப்பாற்றிய இந்தியப் பொலிஸாரை ஹாரி பாராட்டினார். இந்தியாவின் அவசரகால, நெருக்கடி முறையை மெச்சி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பலமுறை பனியில் மாட்டிக்கொண்ட சுற்றுப்பயணிகளை தாம் மீட்டுள்ளதாக லடாக் பொஸிஸார் கூறினார்.