• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்​: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு | Eswaran announces protest against molybdenum mining in Palani

Byadmin

Jul 14, 2025


நாமக்​கல்: பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைப் பகு​தி​யில் மத்​திய புவி​யியல் துறை மூலம் மாலிப்​டினம் உலோகம் இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மாலிப்​டினம் சுரங்​கம் தோண்டி எடுத்​தால் பழநி மலைப் பகு​தி​கள் அனைத்​தும் அழிந்து போகும்.

பழநி மலை​யின் மீதும் அங்​குள்ள முரு​கன் மீதும் உலகம் முழு​வதும் உள்ள தமிழர்​கள் அனை​வரும் மிகுந்த பற்று வைத்​துள்​ளனர். மதுரை மாவட்​டம் அரிட்​டாப்​பட்​டியைப்​போல, இப்​பகு​தி​யில் சமண படு​கைகளும், மிகப்​பெரிய பல்​லு​யிர் தளங்​களும் உள்​ளன.

இங்கு சுரங்​கம் தோண்​டி​னால் பழநி மலை மற்​றும் இடும்​பன் மலை, ஐவர் மலை, நெய்க்​காரப்​பட்​டி, கரடிக்​குட்​டம், சத்​திரப்​பட்டி ஆகிய பகு​தி​கள் பாதிக்​கப்​படும். மதுரை​யில் முரு​கன் மாநாடு நடத்​துபவர்​கள், பழநி முரு​கன் கோயி​லில் சுரங்​கம் தோண்ட நினைப்​பது தவறு. இந்த விவ​காரத்​தில், எக்​காரணத்​தைக் கொண்​டும் நாம் கவனக் குறை​வாக இருந்து விடக்​கூ​டாது.

மாலிப்​டினம் சுரங்​கம் தொடர்​பாக மத்​திய அரசு முன்​னெடுப்​பு​களைத் தொடர்ந்து செய்​தால், முருக பக்​தர்​களை ஒன்று திரட்டி போராட்​டம் நடத்​து​வோம். மேலும், சுரங்​கம் தோண்​டும் மத்​திய அரசின் நடவடிக்​கை​யைத் தமிழக அரசு தடுக்க வேண்​டும். இவ்​வாறு ஈஸ்​வரன் தெரி​வித்​துள்​ளார்.



By admin