• Wed. Jul 30th, 2025

24×7 Live News

Apdin News

பழுப்பு முட்டையில் வெள்ளை முட்டையைவிட அதிக ஊட்டச்சத்து உள்ளதா? – நிபுணர்கள் கூற்று என்ன?

Byadmin

Jul 29, 2025


பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளதாக அமெரிக்க வேளாண்துறை குறிப்பிடுகிறது.

வெள்ளை நிற முட்டையா அல்லது பழுப்பு நிற முட்டையா? நிச்சயமாக இந்த விவாதத்தை கேட்டிருப்பீர்கள்.

இரண்டையும் ஒப்பிடுகையில் எந்த முட்டையில் அதிக ஊட்டச்சத்து உள்ளது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது.

பழுப்பு நிற முட்டையே இயற்கையானது என்றும் அதனால் இதில் அதிக ஊட்டச்சத்து இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இதை அதிக ஆரோக்கியம் தரக்கூடியதாக பார்க்கின்றனர். ஆனால் இது உண்மையா?

முட்டையின் நிறம் எதை சார்ந்தது?

வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகள் எளிதில் கடைகளில் கிடைக்கக் கூடியவைதான். ஆனால் இந்த நிற வேறுபாடு ஏன்? இதனால் ஊட்டச்சத்தில் மாறுபாடு உள்ளதா?

By admin