• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

பவானிசாகர் அணைக்கு 3429 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Byadmin

Jul 14, 2026


பவானிசாகர் அணைக்கு 3429 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி கொண்ட பவானிசாகர் அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும்.

கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.

பவானிசாகர் அணை

இந்நிலையில் கடந்து செல்ல நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது

By admin