• Tue. Jul 14th, 2026

24×7 Live News

Apdin News

1934 உலகக்கோப்பையை இத்தாலி வெல்ல வழிவகுத்த முசோலினியின் புதிய உத்தி என்ன? ஒரு வரலாற்று பார்வை

Byadmin

Jul 14, 2026


இத்தாலி, முசோலினி, உலகக்கோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Archive/SS Lazio

படக்குறிப்பு, 1934-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இத்தாலியத் தேசியக் கால்பந்து அணியில் அன்ஃபிலோஜினோ குவாரிசி இடம்பெற்றிருந்தார்; இருப்பினும், அவர் தனது சொந்த நாடான பிரேசிலில் ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாத ஒருவராகவே இருந்தார்.

உலகக் கோப்பையை ஏந்திய முதல் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் யார்? ஒரு வினாடி-வினாவில் இந்த கேள்வி இடம் பெற்றால், 1958 ஸ்வீடன் உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் கேப்டனாக இருந்த ஹைரால்டோ பெலினியின் பெயரை நீங்கள் பதிலாகக் கூற வாய்ப்புள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தின் நுழைவாயிலில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஆனால், இது ஒரு சிக்கலான கேள்வி: சொல்லப்போனால், அந்த கௌரவம் அன்ஃபிலோஜினோ குவாரிரியையே (Anfilogino Guarisi) சாரும்.

1934-ஆம் ஆண்டு, சாவோ பாலோவில் பிறந்த இந்த முன்கள ஆட்டக்காரர், அந்த ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய மற்றும் வென்ற இத்தாலிய அணியின் ஒரு அங்கமாக இருந்தார்.

தென் அமெரிக்க வீரர்களை “இறக்குமதி” செய்யும் உத்திக்கு முசோலினி என்ற சர்வாதிகாரிதான் முக்கிய காரணம்.

பாசிசத்தை உருவாக்கியதில் முக்கிய நபராகத் திகழ்ந்த முசோலினி, 1922 முதல் 1943 வரை இத்தாலியை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.

By admin