• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

பஸ்ஸில் கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் கொலை; இரு சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை!

Byadmin

Jul 27, 2025


இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் 14 வயது சிறுவனை பஸ்ஸில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில் பலியாசிய சிறுவன் 27 முறை கத்தியில் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு 15 மற்றும் 16 வயது ஆகும்.

தொடர்புடைய செய்தி : 14 வயது சிறுவன் கொலை சம்பவத்தில் இரு சிறுவர்கள் கைது; லண்டனில் அதிகரிக்கும் சிறுவர் குற்றச்செயல்கள்!

கடந்த மே மாதம் இருவரும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் சிறுவயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு, மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அவர்கள் இருவரும் குறைந்தது 15 ஆண்டு 110 நாள்கள் சிறைத் தண்டனை முடித்த பின்பே அவர்களுக்கு நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதி கூறினார்.

எவ்வளவு கடுமையான தண்டனை வழங்கினாலும் இதுபோன்ற கத்திக்குத்துச் சம்பவங்களில் பலியாகிய சிறுவர்களின் மரணத்திற்கு நியாயம் கிடைப்பதில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி : கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் கொலை

By admin