• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான், செளதி, துருக்கி பாதுகாப்புக் கூட்டணிக்கு டிரம்ப் ஆதரவு – இந்தியாவுக்கு எவ்வளவு கவலைக்குரியது?

Byadmin

Aug 18, 2026


'இந்தியா தனது இடத்தை கண்டறிய முடியவில்லை'

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images

    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செளதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் இடையிலான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

மூன்று நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் “மிகப்பெரிய, வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்.

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து டிரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் தனது பதிவில், “செளதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சமீபத்தில் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“மத்திய கிழக்கு ஒன்றிணைந்து வருவதை இது காட்டுகிறது. இந்த நாடுகள் முன்பைவிட வலுவான முறையில் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். மூன்று நாடுகளின் சிறந்த தலைமைக்கும் வாழ்த்துகள். இது மிகப்பெரிய, வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கை – வாவ்,” என்று அவர் கூறினார்.

By admin