• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

வானதி சீனிவாசன் பாஜக மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு தேசியச் செயலாளர் பதவி

Byadmin

Aug 18, 2026


பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு - தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு தேசியச் செயலாளர் பதவி

பட மூலாதாரம், VanathiBJP

படக்குறிப்பு, வானதி சீனிவாசன்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், கட்சியின் புதிய நிர்வாகிகளை திங்கள்கிழமையன்று அறிவித்துள்ளார்.

புதிய தேசியத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான பெயர்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

பாஜக 13 தேசியத் துணைத் தலைவர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இதில் வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ் மற்றும் பேராசிரியர் தாரிக் மன்சூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், தேசியப் பொதுச் செயலாளர் பதவிக்கு 8 பேரின் பெயர்களும், தேசியச் செயலாளர் பதவிக்கு 16 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன், 16 தேசியச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு அணிகளின் தலைவர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது

By admin