• Wed. Jun 10th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் வெடித்த வன்முறை – சர்வதேச சமூகத்திற்கு இந்தியா விடுத்த வேண்டுகோள்

Byadmin

Jun 10, 2026


மோதலில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதலில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் திங்கள்கிழமை அன்று, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டியின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

செய்தி முகமையான ராய்ட்டர்ஸ், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏஎஃப்பி, ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டியின் ஆதரவாளர்கள் கூடுதல் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைக் கோரி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் (ஜேஏஏசி) கமிட்டி மக்கள் திரண்டிருந்தபோது இந்த மோதல் தொடங்கியது. அந்த நபர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.

பூஞ்ச் செக்டார் கமிஷனர் சர்தார் வாஹித் கான் செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், கலவரக்காரர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் ஒரு வழிப்போக்கரும் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய எதிர் துப்பாக்கிச் சூட்டில் ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

By admin