• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

‘பாமக பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது’ – அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு | PMK flag should not be used Petition filed against Anbumani by Ramadoss to DGP

Byadmin

Jul 24, 2025


சென்னை: அன்புமணியின் ‘தமிழக மக்​கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு’ தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ‛தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற பெயரில் நாளை (ஜூலை 25) முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், ‘தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவது மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்​டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி, பாமக தலை​வர் அன்​புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்​கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்​பில் நடைபயணம் மேற்​கொள்​கிறார்.

இதை முன்​னிட்டு ‘உரிமை மீட்​க.. தலை​முறை காக்​க.. அன்​புமணி​யின் நடை பயணம்’ என்ற வாசகங்​கள் அடங்​கிய இலச்சினையை அன்​புமணி நேற்று சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இந்நிலையில், இந்த நடைபயணத்துக்கு தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.



By admin