• Tue. Jul 29th, 2025

24×7 Live News

Apdin News

பாம்பை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை உயிர் பிழைத்தது எப்படி?

Byadmin

Jul 28, 2025


பாம்பு,  விநோதமான பாம்புக் கடி

பட மூலாதாரம், Alok Kumar

படக்குறிப்பு, பிகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டது

    • எழுதியவர், சீடூ திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த ‘பாம்பு கடி’ சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

இந்த வித்தியாசமான சம்பவம், பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைநகர் பெட்டியாவில் நடைபெற்றது.

By admin