• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

பாராசிட்டமாலை தவறுதலாக அதிக அளவில் உட்கொண்ட மாணவர் மீண்டும் நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு சென்றது ஏன்?

Byadmin

Sep 23, 2026


ரைலி லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்ற

பட மூலாதாரம், SWNS

படக்குறிப்பு, ரைலி லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்றார்

    • எழுதியவர், அன்டோனியா மேத்யூஸ்
    • பதவி, பிபிசி

    • எழுதியவர், ஆஸ்கர் எட்வர்ட்ஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாராசிட்டமால் மருந்தை தவறுதலாக அளவுக்கு அதிகமாக எடுத்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்ற மாணவரின் பெற்றோர், அந்தச் சம்பவம் தங்களுக்கு ஏற்படுத்திய வேதனையைப் பகிர்ந்துள்ளனர். மேலும், நிலைமை எப்படி இவ்வளவு வேகமாக மோசமடைந்தது என்பது தங்களுக்கே புரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த 20 வயதான ரைலி லுபாஸுக்கு 2025 மார்ச் மாதம், பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது கடுமையான சளி ஏற்பட்டது. அப்போது, தாம் எடுத்துக்கொண்ட இரண்டு மருந்துகளிலும் பாராசிட்டமால் இருப்பது தெரியாமல் அவற்றை உட்கொண்டார்.

இதையடுத்து உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர், பல வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் அதிலிருந்து குணமடைந்த அவர், நடக்கவும் பேசவும் மீண்டும் கற்றுக்கொண்டார்.

மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு “லேபிளை கவனமாகப் படிக்க வேண்டும் “என்றும், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ் அமைப்பின் வேல்ஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

ரைலி, பாத் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் மீடியா படித்து வந்தார். வசந்த காலத்தில் அவருக்கு சளி ஏற்பட்டது. அப்போது அது “பெரிதாக ஒன்றுமில்லாதது போல” இருந்ததாக அவர் கூறினார்.

By admin