• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு!

Byadmin

Sep 2, 2026


ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை (01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜா-எல நகர சபைப் பணியாளர்கள் இன்று  கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைக்குண்டைக் கண்டுள்ளனர்.

இது குறித்து உடனடியாகக் கந்தானை பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அந்த கைக்குண்டை பாதுகாப்பாக அகற்றினர்.

இச்சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin