• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்- ஐநா பொதுச் சபையில் தீர்மானம்

Byadmin

Sep 19, 2024


செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது  கொண்டு நிற்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 19 அன்று காஸாவின் புரேஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டடத்தின் முன் ஒரு பெண் தனது குழந்தையுடன் அழுது கொண்டு நிற்கிறார்.

இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 124 உறுப்பினர்களும், எதிராக 14 உறுப்பினர்களும் வாக்களித்தன, மேலும் இஸ்ரேல் உட்பட 43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாமல் வெறும் பார்வையாளராக மட்டுமுள்ள பாலத்தீனத்தால் இதில் வாக்களிக்க முடியாது.

சர்வதேச சட்டத்திற்கு எதிராக மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரத்துள்ளது என்று ஐ.நா-வின் உச்ச நீதிமன்றம் ஜூலை மாதமன்று கருத்து தெரிவித்தது. அதன் அடிப்படையிலே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

By admin