0
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியிருக்கிறார்.
காஸாவில் மோசமான நிலைமையை மாற்ற இஸ்ரேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டெம்பரில் நடைபெறும் ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் அந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அவசரக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்டாமர், காஸாவில் நிலைமை மேம்பட வேண்டும் என்றார்.
காஸாவில் மக்கள் பட்டினி கிடப்பதாக வரும் செய்தியால் ஐரோப்பிய நாடுகள் கோபம் அடைந்துள்ளன.
இங்கிலாந்தின் அறிவிப்புக்குப் பதிலளித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, இங்கிலாந்து ஹமாஸுக்கு வெகுமதி தந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிப்பதாகக் கூறினார்.
அதேவேளை, கடந்த வாரம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ் அறிவித்தது.
காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000ஐத் தாண்டிவிட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு கூறுகிறது.