• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் உருவானது எப்படி? இன்றும் பாடமாக இருக்கும் படைப்பு

Byadmin

May 20, 2026


வீடு படம்

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் சில படங்களே காலத்தை கடந்து மனதில் நிற்கின்றன, தலைமுறைகளை தாண்டி பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று பாலுமகேந்திராவின் வீடு.

பாலுமகேந்திரா ஒரு பேட்டியில், ”நான் 18 படங்களை இயக்கியிருக்கிறேன். அதில் இரண்டு மட்டும் எனக்குத் திருப்தி அளித்தன. ஒன்று வீடு மற்றொன்று சந்தியாராகம். இந்தப் படங்களில்தான் நான் குறைந்த அளவு தவறுகள் புரிந்துள்ளேன். எந்த வியாபார நோக்கத்துடனும் இந்த படங்கள் எடுக்கப்படவில்லை. இந்தப் படங்களை இயக்கும் போதுதான் நேர்மையுடன் பணியாற்றினேன்” என்று கூறியிருக்கிறார்.

1988ல் உருவான வீடு படத்தில் அர்ச்சனா, சொக்கலிங்கபாகவதர், பானுசந்தர், பசி சத்யா முக்கியமான பாத்திரங்களில் நடித்தனர். இளையராஜா இசையமைக்க, வழக்கம்போல் பாலுமகேந்திராவே ஒளிப்பதிவையும் கையாண்டார். கூடுதலாக எடிட்டிங் பணியையும் கவனித்தார். லண்டனை சேர்ந்த கலாதாஸ் என்பவர் சில லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார்.

அந்த காலத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘வீடு’, சிறந்த படத்துக்கான தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றது.

இன்று பாலுமகேந்திராவின் 87வது பிறந்தநாள். வீடு படம் குறித்த நினைவுகளை அந்த படத்தில் பணியாற்றியவர்கள், பாலுமகேந்திராவுக்கு நெருக்கமானவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்

By admin